இன்றைய தலைப்பு செய்திகள் (15-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருச்சி மோதல் சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் 4 பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

திமுக பொது செயலாளர் துரை முருகன் அறிவிப்பு

திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரண்

கே.என். நேரு, திருச்சி சிவா ஆதரவாளர்கள் மோதல் சம்பவம் எதிரொலி

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்....

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைப்பு, இரு சக்கர வாகனம் சேதம்....

நாம் தமிழர் கட்சியின் பேரணி - பொதுக்கூட்டத்திற்கு, அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு....

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுமதிக்க முடியாது என உத்தரவு....

12ம் வகுப்பு பொது தேர்வில் மீண்டும் அதிர்ச்சி

இன்று நடைபெற்ற ஆங்கிலப்பாட தேர்வில்

49 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை


Next Story

மேலும் செய்திகள்