இன்றைய தலைப்பு செய்திகள் (14.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு.....
கைது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது என்றும், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் 3 வது நீதிபதி கார்த்திகேயன் பரபரப்பு தீர்ப்பு....
செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கவில்லை என மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் கருத்து....
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் உத்தரவு.......
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை எதிர்த்து அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடரவில்லை என 3வது நீதிபதி கார்த்திகேயன் கருத்து.....
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது என்பதால், விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவு....
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு.....
புலன் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு இடையீட்டு மனுத்தாக்கல்....
மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஆன்லைன் வழி கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடக்கம்....
ஆன்லைன் வழியாக மாணவர்கள் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவிப்பு....