இன்றைய தலைப்பு செய்திகள் (04-03-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

வதந்தி பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று எச்சரிக்கை...

வடமாநிலத்தவர்கள் அச்சப்பட தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்...

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியதாக 3 பேர் மீது இன்று வழக்குப்பதிவு...

தவறான தகவல்களை வெளியிட்ட பாஜக பிரமுகரை கைது செய்ய டெல்லி விரைந்தனர் தனிப்படை போலீசார்...

பீகார் மாநில அதிகாரிகள் குழுவுடன், தமிழக அதிகாரிகள் முக்கிய ஆலோசனை

வரும் 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என இன்று அறிவிப்பு...

பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து, கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்...

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, சம்பவ இடத்தில் நீதிபதி இன்று நேரில் ஆய்வு...

30 ஆண்டுகளை கடந்தும் துயரத்துடன் வாழ்வதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர்...

நாகை அருகே சிபிசிஎல் பைப்லைன் உடைந்து கடலில் எண்ணெய் கலந்ததால், செத்து மிதக்கும் கடல்வாழ் உயிரினங்கள்...

கச்சா எண்ணெய் குழாயை முழுவதுமாக அகற்றக்கோரி, மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம்...

சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை, 2,000 ஆண்டுகள் கடந்தும் வளர்ச்சியை வழங்கி வருகிறது...

பட்ஜெட் குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று பெருமிதம்...



Next Story

மேலும் செய்திகள்