இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2023)
பாஜக மூன்றாவது முறை ஆட்சியில் அமரும்போது, இந்தியாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்.....உங்கள் கனவுகள், உங்கள் கண்முன் நிறைவேறுவதை காண்பீர்கள் என பிரதமர் மோடி பேச்சு.....
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் எச்சரிக்கை....
திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்கள், ஐந்தாயிரத்து 600 கோடிமதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்....ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்....
மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பவே ஊழல் பட்டியல் என்ற பெயரில் ஆளுநரை சந்தித்துள்ளார் அண்ணாமலை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு....எதையும் சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என்றும் பேட்டி....
ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட டாஸ்மாக் இல்லாத தமிழகம் என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை....குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை முதலமைச்சர் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு....
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டிப்பு......
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு........