காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2023)

x
  • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை.....ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட இஸ்லாமியர்கள்.......
  • டெல்லி ஜும்மா மசூதியில், பக்ரீத் சிறப்பு தொழுகை....ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று பிரார்த்தனை...
  • சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 50 ரூபாயாக குறைந்தது....வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல்....
  • மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.....உத்தரவை அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு.....
  • மாமன்னன் படத்தைப் பார்த்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.....டுவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மகிழ்ச்சி.....
  • தமிழகத்தில் இன்று வெளியானது, மாமன்னன் திரைப்படம்....ஏழை எளிய மக்களுக்கு, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் நலத்திட்ட உதவி...
  • சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்கள்.....கடலூர் அரசு மருத்துவமனையில், பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்....செவிலியர்கள் அலட்சியமாக இருந்ததாக, சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார்....
  • கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு...பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு.....
  • நாமக்கல்லில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு...
  • கணக்கில் வராத ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாயும், ஆவணங்களும் பறிமுதல்...

Next Story

மேலும் செய்திகள்