முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினம் இன்று.| jayalalithamemorialday

x

கர்நாடாக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையில், ஜெயராம், வேதவல்லி இணையரின் மகளாக 1948ல் பிறந்தார். இரண்டு வயதில் தந்தையை இழந்தார்.

பெங்களூர் பிஷப் கட்டான் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த பின், அவரின் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தது. 1958 முதல் 1964 வரை சர்ச் பார்க் கான்வென்டில் படித்தார். பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர் அதில் கற்று தேர்ந்து அரங்கேற்றம் செய்தார்.

1965ல் வெண்ணிறாடை படத்தின் மூலம் திரைபடத் துறையில் நுழைந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். மொத்தம்

127 படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்றார்.

1982ல் அதிமுகவில் இணைந்து, அதன் கொள்கை பரப்பு செயலாளரானார். 1984ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987இல் எம்.ஜி.ஆர் மறைந்த பின், அதிமுக இரண்டாக பிரிந்தது.

ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஒரு அணியும் உருவாகின. 1989 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைந்தன.

அதிமுகாவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 மார்ச் 25ல், பட்ஜெட் அறிக்கையை வாசித்த அன்றைய முதல்வர் கருணாநிதி தாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட குழப்பத்தில், ஜெயலலிதாவும் தாக்கப்பட்டர்.

1991 பொதுத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெயலலிதா தமிழக முதல்வரானார். தமிழகத்தில் உள்ள 69 % இடஒதுக்கீட்டிற்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய, அன்றைய காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் நிறைவேறறச் செய்த்தார்.

இதற்காக, சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை திராவிடர் கழகம் அவருக்கு அளித்து கெளரவித்தது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். பெண் சிசு கொலையை தடுக்க, தொட்டில் குழந்தை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

1996 தேர்தலில் தோல்வியடைந்த பின், ஊழல் குற்றச் சாட்டுகளில் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.

2001 தேர்தலில் வென்று மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, 2006 தேர்தலில் தோல்விடைந்து ஆட்சியை இழந்தார். பின்னர் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வென்று முதல்வரானார்.

2014 செப்டம்பரில் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 2015ல் அவர் மீதான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2016 டிசம்பரில் உடல் நலக்குறைவினால், 68 வயதில் காலமானர்.

ஆறு முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலிதா காலமான தினம், 2016 டிசம்பர் 5.


Next Story

மேலும் செய்திகள்