இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட தினம் இன்று.

x

காஷ்மீரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து பாகிஸ்தானுடன் சேர்க்க, பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் உதவியுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இவற்றில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது ஆகியவை முக்கியமானவை.

2001 டிசம்பரில் இந்த இரண்டு குழுக்களை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள், டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் காரில், போலி அடையாள அட்டை களுடன் ராணுவ சீருடையில், இவர்கள் ஐவரும் நாடாளு மன்றத்தின் வாகன நிறுத்தத்திற்குள் ஊடுறுவினர்.

ஏ.கே.47 ரக இயந்திர துப்பாக்கிகள், கைகுண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை கொண்டு தாக்குதலை தொடங்கினர். அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் உள்துறை அமைச்சர் எ.கே.அத்வானி உள்ளிட்ட சுமார் 100 எம்.பிகள் இருந்தனர். தாக்குதல் தொடங்கிய உடனே, நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளிகதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தாக்குதலில் டெல்லி காவல்துறையை சேர்ந்த 6 வீரர்களும், நாடாளுமன்ற பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்களும், ஒரு தோட்டப் பணியாளரும் உயிரிழந்தனர்.

ஐந்து பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உருவானது. எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டது. ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 5 முக்கிய பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் தடை செய்த பின், இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

அப்சல் குரு, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானி உள்ளிட்ட 4 பேர் இத்தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பின், 2013ல் அவர் தூக்கிலடப்பட் டார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தினம், 2001 டிசம்பர் 13.


Next Story

மேலும் செய்திகள்