இன்றைய தலைப்பு செய்திகள் (03-07-2023)

x
  • வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சாலை மற்றும் மேம்பால பணிகளை முடிக்க அறிவுறுத்தல்...எந்த மழையையும் தாங்கக் கூடிய சாலைகளாக சென்னை சாலைகள் மாறியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
  • நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து 40 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தயார் நிலை...
  • சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • மேகதாது அணை பிரச்சனை குறித்து தக்க நடவடிக்கைகளை அரசு எடுக்கும்...அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை...
  • மேகதாது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்....நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்...
  • சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை...விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

Next Story

மேலும் செய்திகள்