இன்றைய தலைப்பு செய்திகள் (05.05.2023)
- மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்... வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது...
- பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார், கள்ளழகர்... இந்த ஆண்டு மும்மாரி மழை பொழிந்து விவசாயமும் நாடும் செழிக்கும் என நம்பிக்கை...
- சர்க்கரை தீபம் ஏந்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள்... கோவிந்தா கோஷத்துடன் தரிசித்தனர்...
- சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்... நேற்று மட்டும் 7 லட்சம் பேர் கிரிவலம் சென்றதாக தகவல்...
- திருவண்ணாமலைக்கு ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு பேருந்து தட்டுப்பாடு... சென்னை கோயம்பேட்டில் 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்த பயணிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்...
- கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, ஈரோடு, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை... கோடை வெப்பத்தை தணித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி...
- முதலமைச்சர், அமைச்சர்கள் பற்றிய அவதூறான வீடியோக்களை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கோரிக்கை... சட்ட விரோதமாக இயங்கி வந்த 221 கடன் செயலிகளும் நீக்கம்...
Next Story