Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-09-2023) | Morning Headlines | Thanthi TV

x

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது..கட்டட இடிபாடுகளில் இருந்து தோண்ட தோண்ட சடலங்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம்...

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் புவியின் 3வது சுற்றுவட்டப்பாதைக்கு முன்னேற்றம்..விண்கலத்தின் பாதை உயர்த்தக்கூடிய அடுத்தக்கட்ட பணிகள் 15 தேதி அதிகாலை 2 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு...

ஜி 20 மாநாட்டிற்கான பிரகடனத்தை ஏற்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது.பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு..

இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பிய இணைப்பு பொருளாதார வழித்தடத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடிஒட்டுமொத்த உலகிற்குமான பொருளாதார மேம்பாட்டிற்கு புதிய திசையை வழங்கும் என்றும் பேச்சு...

ஜி-20 உச்சி மாநாட்டை ஒட்டி அமெரிக்கா அதிபர் பைடன், பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளின் தலைவர் இணைந்து குழு புகைப்படம்..ஒன்றாக இணைந்து பணியாற்ற உறுதியளிப்பதாக என நான்கு நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தகவல்...

ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்...உலக நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் அறிவிப்பு...

ஜி 20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த இரவு விருந்து...பல்வேறு நாடுகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் உட்பட 170 பேர் பங்கேற்பு...

ஜி20 மாநாட்டில் இந்தியா எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத் என்று பேசினார், பிரதமர் மோடி....பிரதமர் மோடியின் முன்பிருந்த நாட்டின் பெயர் பலகையிலும், பாரத் என இடம்பெற்றிருந்தது.....

இந்தியா என்ற பெயரையே மாற்றிவிட்டார் பிரதமர் மோடி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்...இப்படியே போனால் மோடி சர்வாதிகாரியாக மாறிவிடுவார் என்றும் எச்சரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்