Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று வெளிநாடு பயணம்...தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்...

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்...அதிக பட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் வரை வேறு ரூபாய் நோட்டுகளை ஒருவர் பெறலாம்...

ஆன்லைனில் உணவு வாங்கும் வாடிக்கையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக சோமாட்டா நிறுவனம் தகவல்...கடந்த வெள்ளிக்கிழமை முதல் 72 சதவீதம் வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுகளையே தருவதாகவும் அறிக்கை...

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை...தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு...

பெட்ரோல் நிலையங்களில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும்...பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு...

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்....செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக ராகுல்நாத் மீண்டும் நியமனம்....

விஷ சாராய விவகாரம் குறித்து ஆளுநரிடம் மனு அளிப்பதற்காக பேரணியாக சென்ற, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 ஆயிரத்து 500 பேர் மீது வழக்கு...பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் நடவடிக்கை...

மரக்காணம் விஷச்சாராய வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைப்பு...அடுத்தகட்ட விசாரணையை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு...

தஞ்சாவூரில் சயனைடு கலந்த மது குடித்ததால் உயிரிழந்த 2 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைப்பு...8 மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தைக்கு பின், உடல்களை பெற்றுக் கொண்டனர்...

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை...ஊட்டி பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கின் நிழல் குடை சரிந்து விழுந்தது...நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ உ சி திடலில் பரபரப்பு...


Next Story

மேலும் செய்திகள்