Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள்

x

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை சோதனை...

சைதாப்பேட்டை வீடு உள்பட 9 இடங்களில் சோதனை நடப்பதாக தகவல்...

பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை...

விழுப்புரம் மாவட்டம் சண்முகாபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்...

மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்...

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல்...

விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் சோதனை...

காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்...

பெங்களூருவில் இன்று தொடங்குகிறது எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம்...

24 அரசியல் கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு...

பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில்,

காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டு வந்த ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கலந்து கொள்வது உறுதி...

முதல் மற்றும் 2வது கூட்டத்திற்கு இடையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் என தகவல்...

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

இரண்டு நாள் கூட்டத்திலும் பங்கேற்பதாக தகவல்...

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படாது.....

ஜூலை 31ம் தேதியே கடைசி தேதி என, மத்திய வருவாய் செயலாளர் உறுதி...

தக்காளியை போன்றே வெங்காயத்தின் விலை உயரலாம் என கணிப்பு....

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்தது மத்திய அரசு....

சென்னை கோயம்பேடு சந்தையில், இன்று தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை...

நேற்றைய விலையை விட பத்து ரூபாய் உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்