காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை... நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம்...
- தமிழகத்தில் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு..... ஓரிரு இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....
- தமிழகத்தில் நேற்று 5 இடங்களில் சதமடித்த வெயில்... திருத்தணி, ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு...
- கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்... ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள், ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை...
- வரும் 16ஆம் தேதி அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம்... முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு....
- திமுகவை வீட்டுக்கு அனுப்புவதை முழு வேலையாக கொண்டே, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பு... அண்ணாமலை இருந்த காலத்தில் தமிழக பாஜக மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளதாகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு...
- தைலாபுரம் தோட்டத்தில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்... விரைவில் நல்ல செய்தி வரும் என, ஆலோசனை கூட்டத்துக்கு பின் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தகவல்...
- பாமக தலைவர் பதவி விவகாரம் தங்களின் உட்கட்சி பிரச்சினை என அன்புமணி ராமதாஸ் விளக்கம்... ராமதாஸின் கொள்கையை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம் எனவும் பேட்டி...
- சித்திரை திருநாள் வாழ்த்து செய்தியில், பாமக நிறுவனர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ள ராமதாஸ்.. பாமக தலைவர் குறித்து அன்புமணி உடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வருகிறதா என தொண்டர்கள் எதிர்பார்ப்பு...
- ஆளுநருக்கு எதிரான வழக்கை போலவே, நீட் வழக்கிலும் நியாயம் கிடைக்கும்... திமுக எம்.பி. கனிமொழி நம்பிக்கை....
- வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு... திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் மனு தாக்கல்...
- ஐபிஎல் தொடரில், இன்று இரவு 7.30 மணிக்கு ஏகனா மைதானத்தில் சென்னை - லக்னோ அணிகள் பலப்பரீட்சை... தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை, வெற்றிப் பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...
Next Story
