காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2025)| 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்...... சென்னையில் நூறு இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண மாநகராட்சி சார்பில் ஏற்பாடு.....
- தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், பட்ஜெட் நிச்சயம் அமையும்... எக்ஸ் தளத்தில் புரோமோ வீடியோவை வெளியிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...
- தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், பட்ஜெட் நிச்சயம் அமையும்... எக்ஸ் தளத்தில் புரோமோ வீடியோவை வெளியிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்...
- தமிழக பட்ஜெட் ஆவணங்களில் இந்திய ரூபாய் சின்னத்தை நீக்குவது, தேசிய ஒற்றுமை உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது... பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலையை குறிப்பதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..........
- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கும்... செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் உள்ளதாக, பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்...
- பயணிகளின் வசதிக்காக, வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பொது பெட்டிகள் இணைப்பு... மே 11 முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...
- ஒருமாத இடைவெளியில் மீண்டும் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு... இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.......
- சென்னையில் ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்பம் போல் பயணிக்கும் திட்டம்... விரைவில் அறிமுகம் செய்ய மாநகர போக்குவரத்து கழகம் முடிவு...
- டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில், ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்...... ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்ததாக அதிர்ச்சி தகவல்... பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் வழங்க லஞ்சம் பெறப்பட்டதும் கண்டுபிடிப்பு...
- டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பாஜகசார்பில் 17ஆம் தேதி டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம்... பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...
- கடலூர் முதுநகர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால் பயங்கர விபத்து... முன்னால் சென்ற மீன் லாரி, கட்டடங்கள் மீது மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது....
Next Story