காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.... விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு....
  • தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை.... கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், திடீர் மழையால் வெப்பம் தணிந்தது....
  • சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் விமானச் சேவை பாதிப்பு..... 9 விமானங்கள் தரையிறங்க முடியாமல் 30 நிமிடங்கள் வானிலேயே வட்டமடித்தன.....
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை..... மின்னல் தாக்கியதில் 2 முதியவர்கள் உயிரிழப்பு.... ஒருவர் படுகாயம்...
  • திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் புகுந்த மழைநீர்... பக்தர்கள் கடும் அவதி...
  • நெய்வேலி என்எல்சி சுரங்கங்களில், நிலக்கரி வெட்டியெடுக்கும் பணிகள் நிறுத்தம்... தொடர் மழை காரணமாக சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் தற்காலிகமாக பணி நிறுத்திவைப்பு...
  • ராமநாதபுரத்தில், பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை.... வெளிப்பட்டினம் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால், மாணவர்கள் அவதி...
  • பாகிஸ்தானின் போலன் நகரில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலை கடத்திய, பலூச் விடுதலை ராணுவம்... 182 பேரை பிடித்துச் சென்றதாகவும், 11 ராணுவ வீர‌ர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவிப்பு... ரயில் பயணிகளை மீட்க முழுவீச்சில் இறங்கியுள்ள பாகிஸ்தான் ராணுவம்...
  • மொரிசீயஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது அறிவிப்பு .... மதிப்புமிக்க விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை....
  • தேசிய கல்விக்கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஏற்காது..... உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி...
  • தமிழக எம்.பி.க்களை நாகரிகம் இல்லாதவர்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்...... மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்...
  • மக்களவையில், தான் பேசிய வார்த்தைக்கு மீண்டும் மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்.... இன்னும் சொல்லப்போனால் 100 முறை கூட மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேச்சு...
  • தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தங்கள் அரசு ஆர்வமாக இருப்பதாக தமிழக தலைமைச் செயலாளர் எழுதிய கடிதம்.... கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதியிட்ட கடிதத்தை மாநிலங்களவையில் வாசித்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
  • புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்..... தவறான தகவல்களை பரப்புவதால், அது உண்மையாக மாறிவிடாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி..
  • அநாகரிகம் என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வைத்த நீங்கள், தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரை போற்றுவது ஏன்?.... நாடாளுமன்றத்தில், தமிழக எம்.பி.க்களை பார்த்து நிர்மலா சீதாராமன் கேள்வி....
  • காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதா?.... திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்....
  • சென்னையில் பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் சீமான், அண்ணாமலை திடீர் சந்திப்பு... சீமானிடம் "Fight பண்ணிக்கிட்டே இருங்க, Strong-ஆ இருங்க என தைரியம் கொடுத்த அண்ணாமலை...

Next Story

மேலும் செய்திகள்