காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • மகாசிவராத்திரியையொட்டி, தமிழகத்தில் பல்வேறு சிவன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு.... சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்....
  • மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி... திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் களைகட்டிய கிராமிய கலைநிகழ்ச்சி...
  • கோவை ஈஷா யோகா மையத்தில், மகா சிவராத்திரி கோலாகலம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தியானத்தில் பங்கேற்பு....
  • ஈஷாவில், களைகட்டிய மகா சிவராத்திரி கொண்டாட்டம்.. கிராமிய கலைநிகழ்ச்சிகள், ஆட்டம் - பாட்டம் என உற்சாகம்...
  • சிவனின் முழு அருளைப் பெறும் நாளாக மகா சிவராத்திரி உள்ளதாக, ஈஷா விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு... கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு....
  • அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசின் நோக்கம்... உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
  • தமிழக வெற்றிக் கழகம் எளியவர்களுக்கான கட்சிதான், பண்ணையார் கட்சி கிடையாது..... தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு..... 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வருவோம் எனவும் உறுதி....
  • தமிழகத்தில் பதவியில் இருக்கும் பண்ணையார்கள் யார் என்பதை தவெக தலைவர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்..... நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்....
  • விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும், அப்போது த.வெ.க.வின் பலம் என்ன என்பது தெரியும்...த.வெ.க., தமிழகத்தின் முதன்மை கட்சியாக இருக்கும் என்றும், விஜய் பரபரப்பு பேச்சு...
  • கல்வி நிதி விவகாரத்தில் ஹேஷ்டாக் போட்டு எல்.கே.ஜி., யூ.கே.ஜி., குழந்தைகளைப் போல் மத்திய, மாநில அரசுகள் விளையாடி வருகின்றன... நிதி தருவது ஒன்றிய அரசின் கடமை... கேட்டுப் பெறுவது தமிழக அரசின் உரிமை என்றும், த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்...
  • மும்மொழிக் கொள்கையில் திமுகவும், பாஜகவும் நாடகமாடுகிறதா? தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சிவசங்கர் கருத்து....
  • தவெக தலைவர் விஜய்யின் குழந்தைகளுக்கு மூன்று மொழி, தொண்டர்களுக்கு மட்டும் இரண்டு மொழியா?..... வாட் ப்ரோ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி....
  • தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் த.வெ.க. தலைவர் விஜய்... இது மாற்றத்திற்கான நேரம் என்றும், ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பேச்சு...
  • யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை... உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்.... விஜய்- பிரசாந்த் கிஷோர் கூட்டணி குறித்து அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்...

Next Story

மேலும் செய்திகள்