காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படும் முன், காவல்துறை சரிபார்ப்பு சான்று கட்டாயம்... பள்ளிகளில் பாலியல் அத்துமீறலை தடுப்பது தொடர்பாக, தலைமை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு...
  • புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நாளை பதவியேற்பு... தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அறிவிப்பு...தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியை நியமித்து உத்தரவு...
  • தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே மத்திய அரசு விரும்புகிறது... தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு...
  • அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு... ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் நடவடிக்கை...
  • கல்வி நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து, திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்... சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு...
  • புதிய கல்விக்கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்... தமிழ்நாட்டு மாணவர்கள் பல மொழிகளை கற்றுக் கொள்வதில் என்ன தவறு என்றும் கேள்வி...
  • நிதி விவகாரத்தில் மத்திய அரசிடம் மண்டியிட மாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆவேசம்... மத்திய அரசிடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையை தான் கேட்கிறோம் என்றும் காட்டம்...
  • சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு... 174 மாநகர பேருந்துகள் விடியல் பயண திட்டப் பேருந்துகளாக மாற்றப்பட உள்ளதாக தகவல்....
  • தமிழக பட்ஜெட் மார்ச் 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்... ஐந்து நாட்கள் சட்டப்பேரவை கூட்டப்பட்டு, பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெறும் எனவும் எதிர்பார்ப்பு...
  • பறவைக்காய்ச்சல் எதிரொலியாக அமெரிக்காவில் முட்டை விலை கிடுகிடு உயர்வு.... ஒரு முட்டை இந்திய மதிப்பில் 72 ரூபாய்க்கு விற்பனை....

Next Story

மேலும் செய்திகள்