காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- வரும் மார்ச் 22ஆம் தேதி, ஈடன் கார்டன் மைதானத்தில், கோலாகலமாக தொடங்குகிறது, ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா... முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை...
- ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்தில், ஏழு லீக் போட்டிகளில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ்... மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் போட்டியில், சென்னை - மும்பை அணிகள் மோதல்... பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளையும் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் சி.எஸ்.கே...
- ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 13 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.... ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு....
- கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், மே 25ஆம் தேதி ஐ.பி.எல். இறுதிப்போட்டி... முதல் குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள், ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் அறிவிப்பு...
- புதிய FASTag விதிமுறைகள் இன்று முதல் அமல்... போதிய பேலன்ஸ் இல்லை என்றால் FastTag முடக்கப்பட வாய்ப்பு...
- டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில், வரும் 20ஆம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழா... நாளை மறுநாள் பாஜக சட்டமன்ற குழு கூட்டம் கூடி, முதலமைச்சரை தேர்வு செய்யும் எனவும் தகவல்...
- நிதி விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்... இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனவும் கேள்வி...
- தமிழ்நாட்டில் என்றைக்கும் இருமொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ஈ.பி.எஸ். திட்டவட்டம்... திமுக அரசை பார்க்காமல், தமிழக மக்களை பார்த்து மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்...
- அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?... 1960களில் காலாவதியான கொள்கையை தமிழக குழந்தைகள் மீது திணிப்பதா? என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி...
- மும்மொழி கொள்கையை வலிந்து திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிக்கும் செயல் என தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு... மாநில மொழி கொள்கைக்கு சவால் விடுத்து, நிதி தர மறுப்பது பாசிச அணுகுமுறை என்றும் கண்டனம்...
- மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் லீக் போட்டியில், உ.பி. வாரியர்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி... ஆறு விக்கெட் வித்தியாசத்தில், எளிதில் வீழ்த்தி அசத்தல்...
Next Story