காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • பாம்பனில் 550 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை 28ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி... ராமேஸ்வரத்தில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக தகவல்.....
  • எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்-அப்பில் வந்தாலும் வெற்றி நமதே! என முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்..... கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி என்று கூறுவோரின் எண்ணம் பலிக்காது என்றும் சாடல்...
  • புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்... மாணவியின் உறவினர்கள் ஆசிரியரை தாக்குவதற்காக துரத்திச் சென்றதால் பரபரப்பு...
  • புதுச்சேரியில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள், பள்ளியை சூறையாடியதால் பரபரப்பு...
  • தமிழகம் முழுவதும், காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது... இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் புகாரில் சிக்கிய நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி உத்தரவு...
  • இறந்த பின்பு ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது விடுதலையாகாது.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து...
  • சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது.... கோயில் அறங்காவலர் பதவிக்கு சாதி முக்கியமல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு....
  • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரிப்பு... ஒரு கிராம் 7 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், சவரன் 63 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை...
  • தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்... 20ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை 43 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்க இருநாடுகளும் முடிவு..... இந்தியாவுக்கு அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வழங்கவும் அமெரிக்கா சம்மதம்.....
  • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு 19 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசு... சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு...
  • காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு வீடியோ வெளியிட்ட சி.எஸ்.கே... வீரர்களின் இனிமையான காதல் தருணத்தை தொகுத்துள்ள வீடியோவை கொண்டாடும் ரசிகர்கள்...

Next Story

மேலும் செய்திகள்