காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • பிரான்ஸ் பயணம் முடிந்து அமெரிக்கா சென்றடைந்தார், பிரதமர் மோடி... வாஷிங்டன்னில், இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு.... அதிபர் டிரம்ப்பை இன்று சந்திப்பதால் பெரும் எதிர்பார்ப்பு...
  • ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தீவிரம்.... பல்லாயிரக்கணக்கான இறப்புகளை நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் தொலைபேசியில் பேச்சு....
  • நாடாளுமன்ற மக்களவையில், புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்.... ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், அறிமுகம் செய்யப்படுகிறது....
  • தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்... சென்னையில் வரும் 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...
  • அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்... தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  • அதிமுக உள்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை.. பதிவு செய்வது மட்டும் தான் ஆணையத்தின் வேலை எனவும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு...
  • தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்பு தர்மமே வெல்லும்... அதிமுக உட்கட்சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ஓபிஎஸ் பேட்டி....
  • சென்னையில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கும்.... காலை 8.30 மணிக்கு பிறகே, விமான சேவைகள் சீராக இயக்கப்படும் என அறிவிப்பு...
  • தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட உயர வாய்ப்பு... சென்னை மற்றும் புறநகரில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல்...
  • கோடை வெயிலை எதிர்கொள்ள மாநில அளவில் செயல் திட்டம் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை.... சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகளுக்கு என்று தனியாக செயல் திட்டம்....
  • தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிரடியாக குறைவு... ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை...
  • பள்ளிகளில் பாலியல் தொல்லை கொடுத்தால், 14417 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண் மூலமாக புகார் அளிக்கலாம்... தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை அழைப்பு...

Next Story

மேலும் செய்திகள்