காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- ஏ.ஐ., (AI) தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகாது... மாறாக புது விதமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக, பிரான்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு...
- ஆபரணத்தங்கம் விலை 64 ஆயிரம் ரூபாயை தாண்டி வரலாறு காணாத உச்சம்..... ஒரு கிராம் தங்கம் முதல்முறையாக எட்டாயிரம் ரூபாயைக் கடந்து விற்பனை....
- விலை ஏற்றம் காரணமாக, தங்கத்தை முன்கூட்டியே வாங்குவதில் மக்களிடையே ஆர்வம் அதிகரிப்பு.... கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் தங்கம் விற்பனை 20 சதவீதம் உயர்வு..... இந்த மாதத்திலேயே தங்கம் விலை 70 ஆயிரம் ரூபாயை எட்டும் எனவும் தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தகவல்...
- மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லையென மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.... சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு 65 சதவீத தொகையை மத்திய அரசே ஏற்கும் என்றும் அறிவிப்பு.....
- அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.... தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனு மீது வாதங்கள் நிறைவு....
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.... ஈ.பி.எஸ்-க்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை, புறக்கணித்தது குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில் பாதுகாப்பு....
- கோபி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..... சர்ச்சைக் கருத்து அதிமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்....
- தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி மக்கள் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர்... சென்னை ஐ.ஐ.டி நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்......
- தமிழகத்தில், பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய முடிவு என தகவல்.... கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அதிரடி .....
- வாரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல்காந்தி, ரயில் மூலம் இன்று சென்னை சென்ட்ரல் வருகிறார்.... தமிழகத்தில் நிகழ்ச்சி ஏதும் இல்லாத நிலையில், விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.....
- சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் போராட்டம்... பொதுமக்களோடு சேர்ந்து நடிகர் கஞ்சா கருப்புவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
- போரூர் அரசு மருத்துவமனையில் பணியில் இல்லாத சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்... எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு...
- அரசு மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வர வேண்டும்.... மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவு.....
Next Story