காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- டெல்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை..... ஆட்சியை தக்க வைக்குமா ஆம் ஆத்மி... அதிரடி காட்டுமா பாஜக என எதிர்பார்ப்பு....
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அசுர பலம் காட்டுமா திமுக.... இருமுனை போட்டி நிலவும் நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்....
- மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி அறங்காவலர் பாலியல் தொல்லை அளித்த கொடூரம்..... சிறுமியின் தகவலால் பெற்றோர் உறவினர்கள் அதிர்ச்சி.....
- மணப்பாறையில், மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த பள்ளி அறங்காவலர் உள்ளிட்ட ஐந்து பேர் அதிரடி கைது..... கொதித்துப் போன பொதுமக்கள், தனியார் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பு....
- மணப்பாறை தனியார் பள்ளியில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக மேலும் ஒரு மாணவி பரபரப்பு புகார்... மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல் தலைமையிலான குழு விசாரணையில் அதிர்ச்சி தகவல்....
- மணப்பாறை தனியார் பள்ளி அறங்காவலர் வசந்தகுமாருக்கு 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்...’’ மற்ற 4 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு...
- சிறுமிகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் அச்சமின்றி அதிகரித்து வருவதாக ஈபிஎஸ் வேதனை.... சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்....
- பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்... தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்.....
- பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது முதலமைச்சருக்கு உறுத்தவில்லையா? என அண்ணாமலை கேள்வி... சமூக விரோதிகளுக்கு காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டதாகவும் விமர்சனம்....
- தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும், 2024ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் போக்சோ வழக்குகள் பதிவு... கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய உள்துறை செயலாளர் அறிவுறுத்தல்...
- அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் திடீர் மாயம்.... பெர்முடா முக்கோணத்திற்கு இணையான மர்மங்கள் நிறைந்த அலாஸ்கா முக்கோணத்தில் தொலைந்ததால் அதிர்ச்சி...
- இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 36வது சதத்தை விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்... ராகுல் டிராவிட், ஜோ ரூட் உள்ளிட்டோரின் சாதனையை சமன் செய்து அசத்தல்...
Next Story