காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.02.2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.02.2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு, இன்று வாக்குப்பதிவு... மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடும் போட்டி...
- ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு... பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியில் இருந்து விலகிய நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே பலப்பரீட்சை...
- மகா கும்பமேளாவில் இன்று காலை 11 மணிக்கு புனித நீராடுகிறார், பிரதமர் நரேந்திர மோடி... டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் சூழலில், கவனம் ஈர்க்கும் நிகழ்வு...
- சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்தி வருவதாக மக்களவையில் பிரதமர் மோடி தாக்கு.... மக்களின் பணம் மக்களுக்காகவே என்பது தான் தங்கள் மாடல் என்றும் உறுதி...
- பொழுதுபோக்கிற்காக ஏழைகளின் குடிசைகள் முன் சிலர் போட்டோஷூட் நடத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு... ஏழ்மையை அகற்றுவோம் என்ற காங்கிரஸின் முழக்கம் தோல்வியடைந்து விட்டதாகவும் விமர்சனம்...
- ஆளுநர் ஆர்.என்.ரவி சூப்பர் முதலமைச்சராக செயலாற்ற முடியாது... ஆளுநரின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...
- ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என நாளை தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு... அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணிநேரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்...
- வெளிநாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ, வயநாடு மற்றும் திருவண்ணாமலை நிலச்சரிவு என அனைத்து பேரிடர்களுக்கும் காலநிலை மாற்றமே காரணம்... காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கல்வி அறிவு அவசியம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
- திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்தில் இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்... அனைவரையும் அப்புறப்படுத்தி போலீசார் கைது செய்ததால் பரபரப்பு...
- திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததன் எதிரொலி... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இந்து முன்னணியினர் பெருந்திரளாக ஆர்ப்பாட்டம்...
- அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு.... அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி..
- பள்ளி காலம் முழுவதும் ஒருநாளும் தாமதமாக சென்றதில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பெருமிதம்... சரியான வழிகாட்டுதலும், அர்ப்பணிப்பும் இருந்தால் இலக்குகளை எட்டி சாதிக்கலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை...
Next Story