காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ஏழு லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரம்... ராணுவ விமானத்தின் மூலம் இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடங்கியதாக தகவல்...
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரும் 13ஆம் தேதி நேரில் சந்திக்கிறார், பிரதமர் மோடி... அதிபர் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி...
  • இந்தியாவுக்கு சொந்தமான 4000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.......வெளியுறவுக் கொள்கைகள் குறித்து ஆதாரமற்ற கூற்றுக்களை கூறக் கூடாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆட்சேபம்...
  • வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை... பிரபல தொழிலதிபர்களின் கருத்து சர்ச்சையான நிலையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே விளக்கம்...
  • அண்ணா நினைவு தினத்தையொட்டி, புகழ் வணக்கம் செலுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவு.... வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள், லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம் எனவும் சூளுரை....
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்விக்கடன் 48 கோடியே 95 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்தது தமிழக அரசு... கல்விக்கடனை வசூலிக்க சரியான பதிவேடுகள், ஆவணங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு...
  • குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக்கடன் ரத்து என்று அறிவித்து, மாணவ சமுதாயத்திடம் சாதிப் பாகுபாட்டை தூண்ட வேண்டாம்... தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்...
  • ஏடிஜிபி கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்... சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டிய ஏடிஜிபிக்கு கொலை மிரட்டல் தான் பதிலா? எனவும் கேள்வி...
  • ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவே காரணம்... உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் தெரிவித்திருந்த நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்...
  • திருப்பரங்குன்றம் கோயில் முன் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்ததன் எதிரொலி... திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு....
  • திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையீடு... அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் மறுப்பு...
  • மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும் 144 தடை உத்தரவு அமல்... திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த, பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினருக்கு வீட்டுக்காவல்...
  • மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டதாக கூறி, பிப்ரவரி 8ம் தேதி திமுக கண்டன பொதுக்கூட்டம்... தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து விட்டதாக குற்றச்சாட்டு...
  • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது.... பொதுநல வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம்....
  • சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், வரும் 23ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை... தொடங்கிய ஒரு மணிநேரத்திற்கு உள்ளாகவே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்...

Next Story

மேலும் செய்திகள்