காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்றார் டிரம்ப்... வாஷிங்டன் டி.சி.யில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியுடன் பதவி ஏற்பு விழா கோலாகலம்...
- டிரம்ப் பதவியேற்பு விழாவில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பு... இந்தியா சார்பில் கலந்துகொண்டார், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...
- அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஜோ பைடன், பராக் ஒபாமா, பில் கிளின்டன் உள்ளிட்டோர் பங்கேற்பு... தொழில் அதிபர்கள் எலான் மஸ்க், மார்க் சுகர்பெர்க், ஆல்ஃபாபட் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்...
- அமெரிக்காவில் தேசிய அளவிலான அவசர நிலை தென் எல்லைகளில் உடனடியாக பிரகடனம்... அதிபராக பதவி ஏற்ற பின் முதல் அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டார், டொனால்ட் டிரம்ப்...
- ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே இனி அமெரிக்காவில் அங்கீகாரம்... பேச்சுரிமையை மீட்பதற்கான நடவடிக்கையை எடுப்பேன் என்றும் டிரம்ப் உறுதி...
- அமெரிக்காவில் நடந்து வந்த ஊழல் நிறைந்த ஆட்சி முறை முடிவுக்கு வந்திருப்பதாக, அதிபர் டிரம்ப் பெருமிதம்.. இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்து விட்டது என்றும் சூளுரை...
- டெல்லியில் நடைபெற்ற அரசமைப்பின் 75ஆவது ஆண்டு விழாவில், சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு... ஆளுநர் குறித்து அப்பாவு பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என, இடையிடையே குறுக்கிட்ட மாநிலங்களவை துணை தலைவர்...
- அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் குறித்து, இந்த அமைப்பில் பேச முடியாவிட்டால் எங்கு பேசுவது...? வெளி நடப்பு செய்த சபாநாயகர் அப்பாவு கேள்வி...
- பரந்துரில் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் கிராம மக்களை சந்தித்தார், த.வெ.க. தலைவர் விஜய்...டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை, பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் எடுக்காதது ஏன்...? என்று தமிழக அரசுக்கு கேள்வி...
- பரந்துரில் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் கிராம மக்களை சந்தித்தார், த.வெ.க. தலைவர் விஜய்... டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை, பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் எடுக்காதது ஏன்...? என்று தமிழக அரசுக்கு கேள்வி...
- பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மத்திய அரசை ஏன் விஜய் உள்ளே இழுக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி... நிலத்தை மறு ஆய்வு செய்வது குறித்து மாநில அரசு தான் மத்திய அரசிடம் சொல்ல வேண்டும் என்றும் கருத்து...
Next Story