காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வரும் பொதுமக்கள்... புத்தாடை அணிந்து, வீடுகள் முன்பு புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபாடு...
- சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் நள்ளிரவில் பொதுமக்கள் அவதி... சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் முண்டியடித்த படி ஏறி, ஆபத்தான முறையில் பயணம்...
- சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில்...சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு முன்கூட்டியே வழங்கப்படாததால் பயணிகள் கூட்டம் குறைவு...
- பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்... வாகனங்களும் அதிகளவில் சென்றதால் கடும் நெரிசல்...
- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்று வட்டார பகுதியில் இரவில் திடீர் கனமழை...சந்தையில் மழைநீர் தேங்கியதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொங்கல் வியாபாரம் கடும் பாதிப்பு...
- திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய கேரள மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை... பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், கேரள அரசு உத்தரவு...
- டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வீட்டில் மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டம்... பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு... நடிகர் சிரஞ்சீவி, விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோரும் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்...
Next Story