காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்ற பொதுமக்கள்... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 3வது நாளாக அலை மோதிய கூட்டம்...
- பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பயணிகள் சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்... மூன்று நாட்களில் ஆறு லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அறிவிப்பு...
- தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம் களை கட்டியது.... மாணவ, மாணவிகள் மட்டுமின்றி காவல்துறையினர் உள்ளிட்ட பொது மக்களும் உற்சாகம்...
- பொங்கல் விழாவை வரவேற்கும் வகையில், அதிகாலையில் போகி பண்டிகையை கொண்டாடிய மக்கள்...
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் நிலையில், இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம்... ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள்...
- ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி என்பதே தமிழக மக்களின் விருப்பம்... அரசியல் எதிரிகளை எதிர்கொண்டபடியே கடமையாற்றி வருவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து செய்தி...
- சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவமதித்து விட்டார்... ஆணவம் நல்லதல்ல... அடிப்படை கடமைகளை செய்ய சொல்வதை, அபத்தமானது சிறுபிள்ளைத்தனமானது என்பதா? என்றும் ஆளுநர் மாளிகை கேள்வி...
- சட்டப்பேரவையில் மரபை மாற்ற சொன்னது ஆளுநர் தான்... முதலமைச்சருக்கு ஆணவம் என்ற ஆளுநருக்கு திமிர் என்றும் அமைச்சர் துரைமுருகன் பதிலடி...
- அமைச்சர் துரைமுருகன் அரசியலில் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்... அரசியலில் குறிப்பிட்ட வயதிற்கு பின் ஓய்வுகொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
- அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி... மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தல்...
Next Story