காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில், 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு... கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் என தகவல்...
  • அமைச்சர் துரைமுருகன் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுடன் திடீர் டெல்லி பயணம்... அமலாக்கத்துறை சோதனை நடந்த போது பயணம் மேற்கொண்டதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...
  • ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு... பேரிடர் நிதி மட்டுமின்றி மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம் என பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழில் வெளியீடு...
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும்17-ம் தேதியும் விடுமுறை என அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு... வழக்கமான பொங்கல் விடுமுறையுடன், சனி ஞாயிறு என மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு...
  • சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பாக, டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூட்டு குழு ஆலோசனை... வைரஸ் பரவல் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தகவல்...
  • டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார், பிரதமர் மோடி... மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான புதிய அதிநவீன கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்...
  • திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு... விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு அண்ணல் அம்பேத்கர் விருது, பாடலாசிரியர் கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது என ஒன்பது விருதாளர்கள் தேர்வு... விருதுக்கான பரிசுத்தொகை மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது...
  • சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, முதுகு வலி காரணமாக பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் பும்ரா... இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி பந்து வீசுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு....

Next Story

மேலும் செய்திகள்