காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு.. 11 மணி நேரம் நீடித்த சோதனை, நள்ளிரவில் நிறைவடைந்த நிலையில் , அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்..
- கடப்பாரை, சுத்தியுடன் அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.... படுக்கை அறையை திறக்க சாவி இல்லாததால், 2 கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டதாக பரபரப்பு தகவல்...
- அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் என தகவல்... துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் எஸ்.பி.ஐ வங்கி வாகனத்தில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்...
- பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு... பிரம்மபுத்திரா பாயும் நாடுகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்...
- இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் சில பகுதிகளை இணைத்து புதிய மாகாணங்களை உருவாக்கிய சீனா.. சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என வெளியுறவுத்துறை செயலாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தகவல்..
- கொரோனா கண்டறிந்து 5 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் புதிய வகை HMPV வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல்... இந்தியாவில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம்....
- ஐதராபாத்தில், கூட்ட நெரிசலில் ரசிகை உயிரிழந்த வழக்கு... நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்...
Next Story