காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.12.2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.12.2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • ஜனவரி 9ஆம் தேதி முதல், பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்... ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு....
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பார்க்கை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்... மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தையும் தொடங்கி வைக்கிறார்...
  • தனது பேரன் முகுந்தனுக்கு பாமக இளைஞரணி தலைவர் பதவி வழங்கி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவு... ராமதாஸின் அறிவிப்பை ஏற்க மறுத்து, அன்புமணி பொதுக்குழு மேடையிலேயே கருத்து மோதல்... விருப்பம் இல்லாதவர்கள் விலகிச் செல்லுங்கள் என ராமதாஸ் ஆவேசம்...
  • பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கி இருப்பதாக பொதுக்குழு மேடையில் அறிவித்தார் அன்புமணி... தொலைபேசி எண்ணை அறிவித்து, தொண்டர்கள் அழைக்கலாம் எனவும் அழைப்பு...
  • கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் காரை முற்றுகையிட்ட அன்புமணி ஆதரவாளர்கள்... காரிலேயே 10 நிமிடங்களுக்கு மேல் ராமதாஸ் காத்திருந்ததால் பரபரப்பு...
  • பாமக தலைவர் அன்புமணியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த குழு... தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக்கு பின் முடிவு...
  • வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு... மாணவிக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவும் டிஜிபிக்கு ஆணை...
  • இரவில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்று பெண்கள் விரும்பக் கூடாதா என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி... பெண்களை மதிக்கும்படி அனைத்து ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு...
  • டி.என்.பி.எல். கிரிக்கெட் ஏலத்தின் புதிய விதிமுறைப்படி, வீரர்களை குறைந்த தொகைக்கு தக்க வைக்கப்படும் நிலை... வீரர்கள் கடும் அதிருப்தி... விதிமுறையில் மாற்றம் செய்யவும் கோரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்