காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- வடதமிழகம், ஆந்திராவை நோக்கி நகரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி.... சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை... திருவொற்றியூர், பெருங்குடி பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது....
- அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி... இரு அவைகளும் நாள் முழுவதும் முடக்கம்..
- அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தியதால் எதிர்க்கட்சிகள் நாடகம்... பிரதமர் மோடி குற்றச்சாட்டு....
- அம்பேத்கரை இழிவுபடுத்திய பேசிய அமித்ஷாவுக்கு காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம்..... அம்பேத்கர் மீது மோடிக்கு நம்பிக்கையிருந்தால் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்.....
- காங்கிரஸ் அம்பேத்கருக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலடி... உண்மைகளை திரித்துக் கூறுவதே காங்கிரசில் வேலை என்றும் குற்றச்சாட்டு.....
- அம்பேத்கரை சிறுமைப்படுத்துபவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.. இந்திய மக்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் அரசியல், அறிவுலக ஆளுமை என விஜய் கருத்து...
- மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் பயணிகள் சென்ற படகு மீது கடற்படை படகு மோதி பயங்கர விபத்து.... கடலில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு..... 101 பேர் பத்திரமாக மீட்பு....
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் அஸ்வின் திடீர் அறிவிப்பு... இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகத்துடன் வழியனுப்பிய காட்சிகளை வெளியிட்டது பிசிசிஐ..
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.... 5வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டிரா ஆனது...
Next Story