காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.... மேலும் வலுவடைந்து தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக தகவல்...
- தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை.... ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிப்பு....
- மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...அணையில் நீர் திறந்ததால், பொது மக்களுக்கு உரிய எச்சரிக்கை விட வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...
- நெல்லை தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தின் டிரோன் காட்சி.... குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்....
- தென்காசி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.... குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தின் டிரோன் காட்சி...
- தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தரைமட்ட பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்... சாலையை மூழ்கடித்து செல்வதால், போக்குவரத்து நிறுத்தம்..
- கடையநல்லூர் அருகே கோயிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு.... பக்தர்கள் அனைவரையும், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்பு....
- இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் போட்டி.... முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.....
- ஜூனியர் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா... அரையிறுதியில், ஜப்பானை 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல்...
Next Story