காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- சுயநலத்திற்காக பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்... கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் ஆட்சியாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் எச்சரிக்கை....
- சமூகநீதி பேசும் அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்.. மணிப்பூரில் நடப்பதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு....
- அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில்கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு கூட்டணி நெருக்கடி என விஜய் பரபரப்பு பேச்சு.... திருமாவளவன் மனது நம்முடன்தான் இருக்கும் என்றும் பேச்சு......
- தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு... கருத்தியல் தலைவர்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றும், பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது என்றும் கருத்து....
- தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் பட்டியலினத்தவர்கள் உள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தில் ஏன் பங்கு கேட்கக் கூடாது என ஆதவ் அர்ஜூனா கேள்வி.. ஆட்சியில் பங்கு என்பதை, நெஞ்சுக்கு நேராகவே கேட்போம் என உறுதி.... 25 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு பெரிய கட்சி என்று எப்படி சொல்ல முடியும் என்றும் வினா........
- திமுக கூட்டணி அழுத்தத்தால், விழாவில் பங்கேற்கவில்லை என விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி... அழுத்தம் கொடுத்தால், இணங்கக் கூடிய அளவுக்கு தானோ, விசிகவோ பலவீனமாக இல்லை என்றும் பதில்..
- தமிழகத்தில் திமுக கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடைபெறுவதாக திருமாவளவன் பேட்டி.... அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசியது, விடுதலை சிறுத்தைகளின் கருத்து அல்ல என்றும் விளக்கம்....
- இரட்டை நிலைப்பாட்டில் உள்ள திருமாவளவனின் உண்மை முகம் விரைவில் வெளிப்படும்.... ஆதவ் அர்ஜூனா கருத்தை சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து...
- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரிப்பு... தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு....
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தமிழகம் வந்த மத்தியக்குழு, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஆலோசனை.... மறுசீரமைப்பு பணிகளுக்கு 6 ஆயிரத்து 675 கோடி ரூபாய் வழங்கக் கோரி முதலமைச்சர் மனு அளித்தார்..... விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக விளக்கம்....
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 944 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு..... மத்திய குழு அறிக்கைக்குப் பின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் தொகை விடுவிக்கப்படும் என அறிவிப்பு...
Next Story