காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்பு... ராஜ்குமார் மற்றும் சிறுமி இனியா ஆகிய இருவரது நிலை குறித்து தெரியாத சூழல்...
- திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடந்துவந்த மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தம்... ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய இரண்டு பேரை தேடும் பணி காலை தொடரும் என தகவல்...
- திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... சம்பவம் நடந்த பகுதியில் மண் பரிசோதனை நடத்த உள்ளதாக தகவல்...
- திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டது மிகுந்த துயரத்தை தருகிறது என ஈபிஎஸ் இரங்கல்... உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் துயரத்தை பகிர்ந்து கொள்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து... நெஞ்சை பதற வைக்கும் துயரம் என த.வெ.க. தலைவர் விஜய் அனுதாபம்...
- வெள்ள பாதிப்பால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்பு....
- தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.... கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு...
- ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை... பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்... புயல் மழையால் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...
- புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்... முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு...
- விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூரில் வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்பு பகுதிகள்... நூற்றுக்கும் மேற்பட்டோரை படகு மூலம் மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்...
- ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரை மணம் முடிக்கிறார், இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து... வரும் 22ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறும் என அறிவிப்பு...
Next Story