காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடக்கம்.... 10ம் வகுப்புக்கு மார்ச் 18ம் தேதி வரையும்,12ம் வகுப்புக்கு ஏப்ரல் 4ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு....
  • மதுரையில் கூடல்புதூர் காவல்நிலையத்தில் விசாரணை கைதியை 4 நாள்கள் வைத்து அடித்ததாக போலீசார் மீது பரபரப்பு புகார்.. வலிப்பு ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இளைஞர் அனுமதி..
  • தஞ்சையில் ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இந்த வாரம் விடுமுறை அறிவிப்பு.... கவுன்சிலிங் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே அச்சமற்ற நிலை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி...
  • பள்ளியில் குத்திக்கொல்லப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தாருக்கு அமைச்சர் கோவி செழியன் நேரில் ஆறுதல்... பலியான ஆசிரியை குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு....
  • ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டப்பட்ட வழக்கறிஞருக்கு மூன்று அறுவை சிகிச்சை... குமாஸ்தா ஆனந்தகுமார் கைதை தொடர்ந்து அவரது மனைவியும் கைது செய்தது காவல்துறை.....
  • மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் 41 சென்டி மீட்டர் அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை.... பாம்பனில் 19 சென்டி மீட்டர் மழை பொழிவால் வெள்ளக்காடாக மாறியது... ராமநாதபுரம் பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளித்ததால் பயணிகள் அவதி..........
  • தமிழ்நாட்டில் 24 மற்றும் 25ம் தேதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும்... தனியார் வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தந்தி டிவிக்கு தகவல்...
  • மகாராஷ்டிராவில் கடும் போட்டிக்கு மத்தியில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்..... ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிக்கு ஆட்சியைக் கைப்பற்றும் என கணிப்பு....
  • மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 65 சதவிகித வாக்குகள் பதிவு... ஜார்க்கண்டில் நடந்த 2ம் கட்ட தேர்தலில் 68.45 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்.....
  • நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு... தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஆணை...
  • ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா 3வது முறையாக சாம்பியன்..... சீனாவை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரம்...

Next Story

மேலும் செய்திகள்