காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • கள ஆய்வு பயணத்தில், விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு.. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்று அறிவுறுத்தல்..
  • கள ஆய்வு பயணத்தில், விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு..... திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்று அறிவுறுத்தல்....
  • பீகாரில் ரயில் எஞ்சின் மோதியதில் ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்த விவகாரம்... சாமானியர்கள் இந்த நாட்டில் எப்போது தான் பாதுகாப்பாக இருப்பார்கள் என பிரதமர் மோடியிடம் ராகுல்காந்தி கேள்வி...
  • மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில், அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரம்... பா.ஜ.க தேர்தல் அறிக்கையை, இன்று வெளியிடுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...
  • வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை ஆட்சியில் அமர வைக்க தொண்டர்கள் 18 மாதங்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்... தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வேண்டுகோள்...
  • விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம்... கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என முழக்கம்...
  • ஒடிசாவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசு முடிவு... முதலமைச்சர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
  • 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன், கையும் களவுமாக சிக்கிய உதகை நகராட்சி ஆணையர்... லஞ்சம் கொடுத்த ஐந்துக்கும் மேற்பட்டோரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை...
  • தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம்... முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை...
  • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்று முடிவில் முதலிடத்தில் நீடிக்கிறார், முன்னணி வீரர் அர்ஜுன் எரிகேசி... சாலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் முதலிடத்தில் நீடிக்கிறார்...
  • டபிள்யூ.டி.ஏ ஃபைனல்ஸ் (WTA Finals )டென்னிஸ் தொடரில் மகுடம் சூடினார், அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்... இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை குயின்வென் ஷெங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்...

Next Story

மேலும் செய்திகள்