காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- நேற்று வந்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்... இதுபோன்ற பலரை திமுக பார்த்துள்ளது என கட்சியின் தொகுதி பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக தகவல்... கூட்டணி குறித்து தாம் பார்த்துக் கொள்வதாகவும் திமுகவினருக்கு உறுதி...
- கூட்டணி கட்சிகளுக்கு தமிழக அமைச்சரவையில் இடமளிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன் கோரிக்கை... சரவணன் கூறியது, அவரது சொந்தக் கருத்து என காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விளக்கம்...
- பண்டிகை கால தள்ளுபடி விற்பனை போல, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் உத்தியை விஜய் கையில் எடுத்திருக்கிறார்... விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம்...
- பாசிசமா...? பாயாசமா...? என்ற விஜய்யின் பேச்சு சினிமா வசனம் போல உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்... சினிமா வசனம் எல்லாம் கொள்கையாகாது எனவும் கருத்து...
- திமுக கூட்டணியில் இருப்பவர்கள் பதவியை விரும்பவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்... 7 முறை ஆட்சி அமைத்தும் கூட்டணி அரசை திமுக அமைத்தது இல்லை எனவும் விளக்கம்..
- உயிரிழந்த திருச்சி மாவட்ட த.வெ.க நிர்வாகிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த, விஜய் ஏன் நேரில் வரவில்லை...? விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் ஆவேசம்...
- த.வெ.க. மாநாடு நிகழ்ச்சிக்காக வந்தபோது உயிரிழந்த தொண்டர்களுக்கு விஜய் இரங்கல்... ஆறு பேர் நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றும் உருக்கம்...
- விக்கிரவாண்டி த.வெ.க மாநாட்டில் மாயமான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் வீடு திரும்பினார்... கையில் பணம் இல்லாமல் 74 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததாக உருக்கம்...
- தீபாவளியையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 4250 சிறப்பு பேருந்துகள் மற்றும் 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன... இன்று முதல் 30ம் தேதி வரை, சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு பயணம் செல்வார்கள் என எதிர்பார்ப்பு...
- வட மாநிலங்களில் தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல, ரயில் நிலையங்களில் குவிந்து வரும் மக்கள்... டெல்லி ஆனந்த விகார் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் செல்லும் ரயிலில் கடும் கூட்ட நெரிசல்...
- தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடைகளில் குவிந்த கூட்டம்.... சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் மக்கள் வெள்ளம்...
- பட்டாசு தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்காக, அனைவரும் பட்டாசு வெடிக்க வேண்டும்... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்...
- புயல் காரணமாக சீனாவின் ஹைனான் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை... குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன...
- இந்திய மகளிர் அணி மற்றும் நியுசிலாந்து மகளிர் அணிக்கு இடையே, இன்று 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி... இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், தொடரை வெல்லப்போவது யார் என எதிர்பார்ப்பு...
Next Story