காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • வங்கக் கடலில் நாளை உருவாகிறது டானா புயல்... ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை... ராணுவம், கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுரை...
  • மதுரையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல தேங்கிய மழைநீர்... பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி...
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா பயணம்... புதின் தலைமையிலான பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்...
  • முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்... 810 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்...
  • முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கி திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும்... முரசொலி செல்வம் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மொத்தம் 14 ஆயிரத்து 16 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.... சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல்........
  • டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்... பட்டாசு குடோன்களுக்கு சீல் வைக்கவும் காவல்துறைக்கு உத்தரவு...
  • புதுச்சேரி மாநில தவெக செயலாளர் சரவணன் திடீர் மரணம்... சரவணனின் உடலை பார்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கண்ணீர் விட்டு கதறியதால் சோகம்...
  • சென்னையில் போலீசாரிடம் தகராறு செய்து கைதான சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல்... சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்...
  • மதுபோதையில் போலீசாரை மிரட்டிய சந்திரமோகன், இதற்கு முன்பும் போலீசாரை மிரட்டியது அம்பலம்... சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து மது அருந்தியபடி, போலீசாரை ஒருமையில் பேசிய வீடியோ வெளியானதால் அதிர்ச்சி...
  • சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்திற்கு முன்னேற்றம்... போலந்து வீராங்கனை இஹா ஸ்வியாடெக்கை பின்னுக்குத் தள்ளினார்...
  • வங்கதேசத்தில் கிரிக்கெட் வீரர் ஷகில் அல் ஹசனின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்... டாக்காவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது மைதானத்துக்கு வெளியே மோதியவர்கள் மீது போலீசார் தடியடி..

Next Story

மேலும் செய்திகள்