காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. ஒரு நாள் முன்கூட்டியே நாளை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை.தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி..
  • தமிழகத்தில் அரசியலும், ஆன்மிகமும் என்றைக்கும் கலக்காது என, துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்.. ஆன்மிகமும், அரசியலும் கலக்க தான் செய்யும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை உறுதி...
  • நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தூக்குவோம் என சீமான் ஆவேசம்... திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டதற்கு கொந்தளிப்பவர்கள், தமிழ்மொழி செத்து விழும்போது கோபப்படாதது ஏன்? எனவும் கேள்வி....
  • தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும்... 5 நாட்களுக்குள் நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை...
  • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்... தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டிய த.வெ.க. நிர்வாகிகள்...
  • தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.... சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக அரசு அறிவிப்பு.....
  • மதுரை மாவட்டத்தில், களை கட்டியது தீபாவளி பண்டிகை விற்பனை... திருச்சி மாவட்டத்திலும், கடைத்தெருக்களில் குவிந்த பொது மக்கள்...
  • மனிதன் பட பாணியில் சென்னையில் நடந்த விபத்து.... தாறுமாறாக ஓடிய கார் மோதி 7 பேர் படுகாயம்....
  • சென்னை மாநகர சாலைகளில், கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்யும் முன்பு நோட்டீஸ் கட்டாயம்.... அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்....
  • வால்பாறையில் வட மாநில தொழிலாளியின் குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி... உடனடி நிவாரண நிதியாக 50 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு... சிறுத்தைப்புலியை பிடிக்க 12 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு...
  • சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழை.... புறநகர் பகுதிகளிலும், விட்டு விட்டு மழை பெய்தது.....
  • 20 லிட்டர் குடிநீர் கேன் , சைக்கிள் போன்றவற்றின் மீதான ஜி.எஸ்.டி.யை குறைக்க பரிந்துரை... அடுத்த மாதம் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு...
  • மகளிர் டி.20 உலகக்கோப்பை தொடரில் இன்று இறுதிப்போட்டி... தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்