Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2023) | Morning Headlines | Thanthi TV
x
  • திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, கூத்தனூரில் உள்ள கல்வி கடவுளான சரஸ்வதி தேவி வித்யாரம்பம் நிகழ்ச்சி... குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன், நெல்மணிகளில் தமிழின் முதல் எழுத்தை எழுத வைத்து, சரஸ்வதி தேவியிடம் ஆசி வாங்கும் பெற்றோர்...
  • வங்கக் கடலில் உருவாகியுள்ள ஹமூன் புயல் காரணமாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... நாளை நண்பகலில் ஹமூன் புயல் வங்கதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • சென்னை ஆவடி அருகே மின்சார ரயிலில் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து... பயணிகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு... அரக்கோணம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி...
  • இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு... தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்... வழக்கம் போல ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவிப்பு....
  • ஆம்னி பேருந்துகள் இயங்கும் என ஒரு சங்கமும், இயங்காது என மற்றொரு சங்கமும் அறிவித்துள்ளதால் பயணிகள் குழப்பம்... தாங்கள் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் எந்த சங்கத்தின் கீழ் வரும் என தெரியாமல் பயணிகள் தவிப்பு...
  • பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அ ழைப்பு... போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இன்று காலை 10.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்...
  • ஆம்னி பேருந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்... பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்...

Next Story

மேலும் செய்திகள்