காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-01-2023)

x

எம்ஜிஆரை தனது பெரியப்பா என கூறிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், எம்ஜிஆரின் பிறந்த நாள், நினைவு நாளில் ஒருபோதும் மரியாதை செலுத்தியது கிடையாது...முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு...

தமிழையும் தமிழ்நாட்டையும் பாதுகாக்க கலைகளை பயன்படுத்த வேண்டும்...சென்னையில் நடைபெற்ற வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்...

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்...ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, திடீர் மோதல்...

கடந்த ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய கட்சிகள் பட்டியலில் தேசிய கட்சிகள் அளவில் பாஜக முதலிடம்...மாநில கட்சிகளில் திமுகவுக்கு முதலிடம்... மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாவது இடம்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரொக்கமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கையில் எடுத்து செல்ல அனுமதி...தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி...

திருமங்கலம் ஃபார்முலாவைப் போல் ஈரோடு இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு மு.க.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஆலோசனை கேட்டிருக்கலாம்...அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி தர்மத்தை மதித்து முடிவெடுப்போம்...தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

பாஜக மாநில செயற்குழு கூட்டம், கடலூரில் இன்று ​நடைபெறுகிறது.,..ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதாக தகவல்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக யார் போட்டியிடுவார்கள்...?விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி....

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டி.. விரைவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்...திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்