காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-10-2022) | Morning Headlines | Thanthi TV

x

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது...மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு...

அதிமுகவுக்கு வலு சேர்க்கும் வகையில் சட்டப்பேரவையில் செயல்பாடு இருக்கும்..முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி...

இன்று அதிமுக உதயமான 51ஆவது ஆண்டு விழா...ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா தரப்பினர் சார்பாக தனித்தனியாக விழா ஏற்பாடுகள்...

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம்....ஓபிஎஸ் அணியுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஜெயக்குமார் தகவல்......

தமிழகத்தில் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்குக்கு மத்திய அரசு உதவி செய்யும்...சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி...

அடுத்த 20 நாட்களில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்....மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு முறையாக செயல்படுத்துகிறாதா என கண்காணிப்பார்கள் எனவும் விளக்கம்...

மத்திய அரசு பணம் தருவதால், தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள்...ஆய்வை வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் கருத்து...

மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்வது மக்கள் நலன் சார்ந்ததாக இருந்தால் சரிதான்...அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து...

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்...பாஜகவின் கனவு தமிழகத்தில் வெற்றி பெறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை...

தொகுதிக்கு 3 மத்திய அமைச்சர்களை நியமித்து, பாஜக தேர்தல் பணியை செய்கிறது...மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு...

சோனியா காந்தியின் மருமகன் போலவே முதல்வர் ஸ்டாலினின் மருமகனும் சொத்துகளை குவித்து வருகிறார்...சூலூரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு...

தொகுதிக்கு 3 மத்திய அமைச்சர்களை நியமித்து, பாஜக தேர்தல் பணியை செய்கிறது...மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு...

சோனியா காந்தியின் மருமகன் போலவே முதல்வர் ஸ்டாலினின் மருமகனும் சொத்துகளை குவித்து வருகிறார்...சூலூரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு...

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை...ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...​

போடி அருகே பெரியாத்து கோம்பை நீர் வீழ்ச்சியில் சிக்கி புதுமண தம்பதி உட்பட 3 பேர் பலி...14 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்...

நவம்பர் 3ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் போராட்டம்...தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு...

தமிழகம் முழுவதும் தீபாவளி விற்பனை களை கட்டியது...ஒரு வாரமே இருப்பதால், நேற்று துணிக்கடைகளில் அலை மோதிய கூட்டம்...

தீபாவளிப் பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பு....மதுபானங்களை இருப்பு வைக்க உத்தரவு.....

தீபாவளிப் பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பு....மதுபானங்களை இருப்பு வைக்க உத்தரவு.....

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட், 'சூப்பர் 12' தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி...ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது...


Next Story

மேலும் செய்திகள்