Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-02-2023) | Morning Headlines | Thanthi TV
♦கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி உற்சவம் களைகட்டியது... யோகி ஆதி சிலை முன்பு கலைஞர்கள் சிறப்பு நிகழ்ச்சி...
♦முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்.. சிவராத்திரியின் ஒளி, நமது பாதையை பிரகாசமாக்கட்டும் எனவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்...
♦தமது கலாசாரத்தின் அடையாளமே சனாதன தர்மம்... உயிர் தன்மையை காலம் காலமாக ஆள்வதே சனாதனம் எனவும் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில், சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு...
♦பெங்களூரு வாழும் கலை மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்... நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு பூஜை... நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு...
♦தஞ்சை பிரகதீஷ்வரர் கோயிலில் களைகட்டியது மகா சிவராத்திரி உற்சவம்... நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை... ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்...
♦மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்... சிவதாண்டவம், பரதநாட்டியம் ஆடி கலைஞர்கள் உற்சாகம்...
♦திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலில் சிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்... பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர்...
♦சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்... கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி நடராஜருக்கு அர்ப்பணம்...
♦நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல்... மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரிக்கை...