Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2023) | Morning Headlines | Thanthi TV
♦இன்று மகாசிவராத்திரி கொண்டாட்டம்.... தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள்...
♦இன்று தமிழகம் வருகிறார், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு... கோவை ஈஷா மையத்தின் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்...
♦வேலூரில் கட்டப்படும் மினி டைடல் பூங்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்... சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்..
♦கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்தவர், காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்... தமிழக - கர்நாடக எல்லையான பாளாறு பகுதியில் பதற்றம்...
♦கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்... உயிரிழந்த ராஜா குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி...
♦மேட்டூர் அருகே, தமிழக மீனவர் ராஜாவை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும்... நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்...
♦மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தான் சட்டப்பூர்வமான சிவசேனா.... சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அங்கீகாரம்...
♦ஏக்நாத் ஷிண்டே அணியை சிவசேனாவாக அங்கீரித்து, வில் அம்பு சின்னத்தை வழங்கிய தேர்தல் ஆணையம்... 2017-ம் ஆண்டில் அதிமுக விவகாரத்தில், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை கொண்டிருந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதை சுட்டிக்காட்டி உத்தரவு...
♦சிவசேனா விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும்.. மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி...
♦ஈரோடு இடைதேர்தல், இந்திய அரசை அடுத்து யார் ஆளப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்... திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா பேச்சு...