Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-02-2023) | Morning Headlines | Thanthi TV
கடந்த 9 ஆண்டுகளில் ஊழலில் இருந்து இந்தியா விடுபட்டு, பொருளாதார வளர்ச்சியில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்.... ஒரு சிலரால் இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என ராகுல்காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு குற்றச்சாட்டு...
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சி செய்த காலகட்டத்தில் இந்தியா கடும் இழப்பை சந்தித்த காலகட்டம்...... காங்கிரஸின் வீழ்ச்சி குறித்து உலக பல்கலைக் கழகங்கள் எதிர்காலத்தில் ஆய்வு செய்யும் எனவும் பிரதமர் கூறியதால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் அமளி...
பிரதமர் மோடி அதானியை பாதுகாப்பது தெளிவாகிறது என ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு... அதானி விவகாரத்தில் விசாரணை அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும் விமர்சனம்...
விவசாயிகள் எல்லாம் ஒரே இரவில் பணக்காரர்களாகி விட்டார்களா?... நாடாளுமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி
மறுசுழற்சி செய்யப்பட்ட PET பிளாஸ்டிக் பாட்டில்களில் தயாரிக்கப்பட்ட நீல நிற கோட்டுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி... மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நடவடிக்கை...
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது... 40 மணி நேரத்திற்குள் 500 முறை நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்...
சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது சிறுவன்... பேரழிவு பற்றி அறியாமல் மீட்பு படையினருடன் விளையாடிய கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள்...
நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள துருக்கி மற்றும் சிரியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்... வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி...
சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு... அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்...
இனிமேல், பிப்ரவரி 14-ம் தேதி, பசு கட்டிப்பிடிப்பு தினம்... பசுக்களை கட்டிப் பிடித்தால், மகிழ்ச்சி அதிகரிக்கும் எனவும் இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிவிப்பை கிண்டலடிக்கும் நெடிசன்கள்...