Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-02-2023) | Morning Headlines | Thanthi TV
கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் 2ஆம் கட்டத்தை சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்... ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவிகள் பயன் பெறுவார்கள் என தகவல்...
ஈரோடு இடைத் தேர்தலில் 96 பேர் வேட்புமனு தாக்கல்... வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை... இறுதி வேட்பாளர் பட்டியல் 10ஆம் தேதி வெளியாகிறது...
தி.மு.க.வின் பி டீமாக செயல்பட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர் ஓ.பி.எஸ் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு... ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்க வாய்ப்பே இல்லை எனவும் திட்டவட்டம்...
ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயருமா?... அல்லது, இலங்கை பிரச்சினை தீருமா...? அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்...
"ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியில்லை" குக்கர் சின்னம் ஒதுக்காததால் முடிவு என, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு...
ஈரோடு கிழக்கில் டிடிவி தினகரன் ஆதரவு யாருக்கு...? என இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு... தீய சக்தி என திமுக-வையும், துரோக சக்தி என அதிமுக-வையும் விமர்சித்து அமமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய நிலையில், எதிர்பார்ப்பு...
தொண்டர்களை சந்தித்த பிறகு, சசிகலா முதல்வராக வேண்டும் என்பதற்காகவே தர்ம யுத்தத்தை ஒ.பி.எஸ் நடத்தினார்...ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப் விளக்கம்...
இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 ஆயிரத்து 500 வட இந்தியர்களின் வாக்கு யாருக்கு...? குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சியினர் தீவிரம்...