Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-02-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-02-2023) | Morning Headlines | Thanthi TV
x

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளரை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பை உள்ளடக்கிய பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேணடும்...

அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது தற்போதைய பொதுக்குழுவிற்கு பொருந்தாது எனவும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...


அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவை, தேர்தல் ஆணையத்துக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவிக்க வேண்டும்...

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்று அதிமுக வேட்பாளரை அங்கீகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.....


பொதுக்குழுவை கூட்டாமல் கடிதம் மூலம் உறுப்பினர்களிடம் இருந்து வேட்பாளருக்கான ஒப்புதலை பெற ஈ.பி.எஸ் தரப்பு முடிவு...

அதிமுக வேட்பாளர் யார் என்று வரும் திங்கட்கிழமையன்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் ஈபிஎஸ் தரப்பு திட்டம்....


அதிமுக வேட்பாளரை ஒப்புக் கொள்வதற்கான படிவத்தை இன்று காலை முதல் வழங்குவதாக கட்சி தலைமை அறிவிப்பு...

சென்னையில் தலைமை கழகத்திலும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் இருந்து பெறலாம் என தகவல்...


இடைத் தேர்தலில் பாஜகவின் நிலை குறித்து அறிய, வேட்பு மனு தாக்கலுக்கான நிறைவு நாள் வரை காத்திருங்கள்...

பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...


கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது...

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிடம் வாங்கியதாக நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சகம் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்