Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-02-2023) | Morning Headlines | Thanthi TV
இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிடும் பட்ஜெட்.... அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் எனவும் பிரதமர் மோடி கருத்து....
புதிய திட்டத்தின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்வு..... நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு...
புதிய வருமான வரி திட்டத்தின் படி மாதம் 62 ஆயிரத்து 500 ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வரி இல்லை... தொழில் மூலம் மாத வருமானம் 58 ஆயிரத்து 250 ரூபாய் இருந்தால் வருமான வரி இல்லை எனவும் அறிவிப்பு....
இந்தியாவின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல்... விலைவாசி உயர்வை குறைக்க அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி...
தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை... தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களை மட்டுமே குறிவைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு...
தனிநபர் வருமான வரியில் மாற்றம், 157 புதிய நர்சிங் கல்லூரிகள், மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்புகள் ஆறுதல் அளிக்கிறது.... தனிநபர் வருமான வரி மாற்றங்களை பழைய முறைக்கும் அறிமுகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.....
மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானது என காங்கிரஸ் தலைமை கொறடா சுரேஷ் விமர்சனம்... அதானியின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு...
2021-ஆம் ஆண்டு வாட்ஸ்-அப் வெளியிட்ட தனியுரிமை கொள்கையை பயனாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை... வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பிபிசி ஆவணப்பட விவகாரம் - என்ஐஏ விசாரணை வேண்டும்... ஹிந்து சேனை உச்சநீதிமன்றத்தில் மனு...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் தென்னரசு போட்டி என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.... தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சியில், வேட்பாளர் அறிமுகம்....