Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2023) | Morning Headlines | Thanthi TV
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை... செவிலியர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி... அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செவிலியர் சங்கம் அறிவிப்பு...
தற்காலிக செவிலியர்கள்நியமனத்தில் குளறுபடிகள் நடைபெற்றதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு... செவிலியர் நியமனம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் தகவல்...
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் நள்ளிரவில் போராட்டம்... உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு...
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு, என்எல்சி-ஐ தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்காதது ஏன்... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி...
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என கே.எஸ். அழகிரி பேட்டி... திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து, எடப்பாடி பழனிசாமி கவலைப்படுவது ஏன் என்றும் கேள்வி....
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளிடையே மோதல்... நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு...
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பது பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கமல்ல... யாத்திரை தேர்தலுக்கானது எனக் கூறி சிறுமைப்படுத்த வேண்டாம் என ஜெய்ராம் ரமேஷ் பேச்சு...
'சென்னை ரன்னர்ஸ்' அமைப்பு சார்பில் மாரத்தான் ஓட்டம்... மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்...