Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-12-2022) | Morning Headlines | Thanthi TV
சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் நள்ளிரவில் கரையை கடந்தது மாண்டஸ் புயல்... இரவு 11 மணி துவங்கி 3 மணி வரை கோர தாண்டவம் ஆடிய சூறாவளிக் காற்று...
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் அதிக பட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது... நள்ளிரவில் மரங்கள் முறிந்து விழுந்தன... வீடுகளில் தண்ணீர் தொட்டி, கண்ணாடி, பூந்தொட்டி போன்றவை சேதம்...
சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 25 க்கும் அதிமாக மரங்கள் முறிந்து விழுந்தன... செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு...
சென்னையில் ஈசிஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள்.... இரவோடு இரவாக மரங்களை அப்புறப்படுத்திய காவல்துறையினர்...
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்தன...
பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் அறுந்து விழுந்த இன்டர்நெட் கேபிள்கள்...இன்டர்நெட் சேவை பாதிப்பு... சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரம்...
கேளம்பாக்கம் அருகே
நெடுஞ்சாலை துறை மூலம் அமைக்கப்பட்ட சிக்னல் கம்பம் பெயர்ந்து விழுந்தது... பேரிடர் மீட்பு குழு உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர்...
புயல் காரணமாக சூறைக்காற்றுடன் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை... காட்டுப்பாக்கத்தில் 16 சென்டி மீட்டர், நுங்கம்பாக்கத்தில்10 சென்டி மீட்டர் பதிவானதாக, வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்...